இலங்கை பிரதான செய்திகள்

லங்கா ஈ நியூஸ் ஆசிரியருக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுக்க இன்டர்போல் மறுப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் சந்துருவன் சேனாதீரவிற்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுக்க இன்டர்போsanthuruvanல் மறுப்பு வெளியிட்டுள்ளது.  லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் சேனாதீரவை கைது செய்வதற்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை இன்டர்போலிடம், கோரியிருந்தது.

எனினும் இந்தக் கோரிக்கையை சர்வதேச காவல்துறையான இன்டர்போல் நிராகரித்துள்ளது. கம்பஹா பிரதம நீதவான் அண்மையில் இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். நீதிமன்றை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் சிகப்பு எச்சரிக்கை விடுக்க முடியாது என இன்டர்போல் தெரிவித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.