இலங்கை பிரதான செய்திகள்

ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ranil-mahintha
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்றில் காணப்படும் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தை உருவாக்கும் முறை மற்றும் பாராளுமன்றம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். இதற்கு மேலதிகமாக தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்வத்தே, செஹான் சேமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.