குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பதவி விலகத் தீர்மானித்தார் என கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது எனவும் பதவி விலக விரும்புவதாகவும் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பதவி விலக வேண்டிய அவசியமில்லை எனவும், நீண்ட ஆலோசனையின் பின்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனருக்கு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நிதிச் சபையில் அங்கம் வகித்து வரும் உறுப்பினர்களான கிருஸாந்த பெரேரா மற்றும் நிஹால் பொன்சேகாவும் ஆகியோரும் பதவி விலகத் தீர்மானித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment