இலங்கை பிரதான செய்திகள்

அம்பாறையில் 6 மீனவர்களை காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு

அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடி கடற்கரையிலிருந்து மீன்பிடிப்பதற்காக  இரண்டு இயந்திரப் படகில் சென்ற 6 மீனவர்கள் 8 நாட்களாகியும் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என மீனவர்களின் உறவினர்கள் காவல்துறையினரிடம் நேற்றையதினம் முறைப்பாடு செய்துள்ளனர்.

வழமையாக  ஆழ் கடலுக்குச் சென்று 2 அல்லது 3 தினங்களில் மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்புவது வழமையானது எனவும்  எனினும்   கடந்த 24 ம் திகதி கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து புறப்பட்ட 8 நாட்களாகியும் கரைக்கு திரும்பவில்லை என்பதுடன்  அவர்களுடனான   தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  ஏறாவூர் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap