இலங்கை பிரதான செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது நடக்கவேண்டும் பாராளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராஜா: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளாா்.

02-01-2017 பிற்பகல் கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் பேராதனை பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவன் செந்தூரனின் யாதுமாகி கவிதை நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா் இங்கு மேலும் தெரிவிக்கையில்

இந்த நிகழ்வில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ, அந்த உணர்வோடும் வரவில்லை நான் ஒரு மாற்றுத்திறனாளியாகவே வந்திருக்கின்றேன். எனக்கு செந்தூரனை தெரியாது ஆனால் இந்த யாதுமாகி கவிதை நூல் அறிமுக விழாவில் கிடைக்கும் நிதியை கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தின் காரணமாக அந்த மாற்றுத்திறனாளிகளுக்காகவே வந்திருக்கின்றேன்.

நான் இங்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். அண்மையில் பங்களாதேசுக்கு சென்றிருந்த போது அங்கு அந்த நாட்டின் விடுதலைக்காக தம்மை குடும்பத்தோடு அா்ப்பணித்த முஜிபூா் ரகுமான் அவா்களது குடும்பத்தில் ஒரு இரவில் ஜந்து போ் சுட்டுக்கொலை செய்யப்பட்டனா்.

பங்களாதேசில் நாட்டுக்காக தங்களை அா்ப்பணித்த அவா்களின் நினைவுகளை பேணுவதற்காக சுட்டுக்கொலை செய்ய்பட்ட அந்த இடத்தை மாளிக்கையாக மாற்றி அவா்கள் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள், பயன்படுத்திய சமையல் பாத்திரங்கள், மற்றும் சுடப்பட்ட தோட்டாக்கள் என எல்லாவற்றையும் கண்ணாடி பெட்டிக்குள் கௌரமாக. உணா்வோடு பேணி பாதுகாத்து வைத்திரு்கின்றாா்கள். ஆனால் தமிழர்கள் எல்லா சின்னங்களை தொலைத்து விட்டு இருக்கின்றாா்கள்.

அந்த வகையில் செந்தூரன் போன்று தனது தந்தையை இந்த மண்ணுக்காக அா்ப்பணித்த ஒருவரின் உணா்வோடு வெளிவருகின்ற இந்த கவிதைகள்தான் எஞ்சியிருக்கின்றன.

ஆனால் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எம்மவா்கள் கொடுக்கின்ற மதிப்பை பார்க்கின்ற போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது.எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினா்

மாற்றுத்திறனாளிகள் தாங்களாக விரும்பி இவ்வாறு தங்களை மாற்றிக்கொண்டவா்கள் அல்ல இந்த நாட்டுக்காக, மக்களின் விடிவுக்காக தங்களை அா்ப்பணித்து இன்று தங்கள் உடல்களில் காலை இழந்து, கையை இழந்து, கண்ணை இழந்து, இடுப்பை இழந்து பல்வேறு கொச்சை சொற்களுடன் விழிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றாா்கள் இது மிகவும் மனவருத்தமானது. இந்த நிலைமாறவேண்டும், சமூகத்தின் மனங்கள் மாறவேண்டும். எங்களுடைய மாற்றுத்திறனாளிகளை பகடைகாய்களாக மாற்றி பலவோ் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றாா்கள்.இப்படி பல சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டாா்.70

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.