இலங்கை பிரதான செய்திகள்

கொத்மலையில் நேபாள சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேரூந்து விபத்து – 18 பேர் காயம்

இன்று பிற்பகல் 03.30 மணியளவில் நேபாளத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு;ள்ளனர்.

கொத்மலை மகாவெலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை பக்கமாக செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு பிரதேசத்தில்  பேருந்து  பாதையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 5 நேபாள நாட்டு  பிக்குமார்களும் ஒரு வியட்நாம் பிக்கும் 09 பெண்களும் 03 ஆண்களும் அடங்குகின்றனர். இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை போக்குவரத்து  காவல்துறையினர்  மேற் கொண்டு வருகின்றனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap