0
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறைக் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். பிரேஸிலில் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைகளில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு மோதிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேஸில் சிறையில் இடம்பெற்ற சம்பவம் வருத்தமும் கவலையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பாண்டவர் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love