இலங்கை பிரதான செய்திகள்

ஐ.தே.க உறுப்பினர்கள் அநீதி இழைத்தால் எதிராக குரல் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அநீதி இழைத்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு போசன விருந்துபசாரமொன்றில் வைத்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் தரப்பினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களினால் ஏற்படுத்தப்பட்டு வரும் இடையூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.