குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கமவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி வரையில் சசி வெல்கமவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சசி வெல்கம அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின், சகோதரரே இந்த சசி வெல்கம என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment