இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் சாசனம் குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் சாசனம் குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அரசியல் சாசனம்  தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட போதியளவு கால அவகாசம் தேவை என சில அரசியல் கட்சிகள்  கோரியுள்ளதாகவும் இதனால் திட்டமிட்டவாறு புதிய அரசியல் சாசனம் குறித்த பாராளுமன்ற விவாதம் நடத்தப்படாது என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 9, 10 மற்றும் 11ம் திகதிகளில் விவாதம் நடாத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. அரசியல் சாசனம் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்கள் பல்வேறு யோசனைத் திட்டங்களை முன்வைத்துள்ள நிலையில் இந்த விடயங்களை ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளதன்  அடிப்படையில் விவாதம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers