இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் சீன இராணுவ முகாம் அமைக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் சீன இராணுவ முகாம் அமைக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லலை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா இராணுவ முகாம் ஒன்றை அமைக்க உள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்து வருவதாகவும்  இந்தப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தினாலும் இராணுவ முகாம்களை அமைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை கடற்படையினரே ஹம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்படுவர் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீமேந்து உற்பத்திச்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எரிவாயு தாங்கி உள்ளிட்டன ஹம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.