பிரதான செய்திகள் விளையாட்டு

தோணியை புகழ்ந்து பாராட்டும் விராட் கோஹ்லி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோணியின் உள்ளீடுகள் அணிக்கு மிகவும் அவசியமானது என அணியின் பதிய தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். புதிய தலைவராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அளித்த செவ்வியில் கோஹ்லி இதனைத் தெரிவித்துள்ளார்.

தோணிக்கு பரஸ்பர மரியாதை வழங்கப்படும் எனவும் அவர் அணியில் அங்கம் வகிப்பது அணிக்கும், இந்திய கிரிக்கட் வாரியத்திற்கும் வலு சேர்க்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக் கொண்டு அணியை வழிநடத்திய தோணிக்கு தற்பொழுது சுதந்திரமாக ஓரு வீரராக விளையாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான சிறந்த இந்திய அணியை கட்டியெழுப்ப முடியும் என   நம்பிக்கை வெளியிட்டுள்ள  விராட் கோஹ்லி , தோணி தம்மை தலைமைப் பதவிக்கு வளர்த்து விட்டதாகவும் இருவருக்கும் இடையில் மிகச் சிறந்த உறவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.