இலங்கை பிரதான செய்திகள்

பௌத்த பிக்குகள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர் – பெவிதி ஹன்ட

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பௌத்த பிக்குகள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பெவிதி ஹன்ட அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச ஆதரவு வழங்கும் விஹாரைகளின் பௌத்த பிக்குகளே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி யுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நாரஹேன்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற கலகம தம்மரங்சி தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்குளி, அனுராதபுரம், குருணாகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த குண்டர்களே இவ்வாறு பௌத்த பிக்குகளை தாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அமைதியான முறையில் பௌத்த பிக்குகள் சத்தியாக் கிரக போராட்டமொன்றை நடாத்த முயற்சித்த போது இவ்வாறு குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் இதனையிட்டு அமைச்சர் வெட்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply