இலங்கை பிரதான செய்திகள்

மேற்கத்தைய ஆடைகள் தொடர்பில் மஹிந்தவினால் பிரசூரிக்கப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்படும் – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

மேற்கத்தைய ஆடைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவினால் பிரசூரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயர் அரச பதவிகளை வகிப்போரின் ஆடைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலே ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உயர் அரச பதவி வகிக்கும் அதிகாரிகள் டை கோர்ட்டுடன் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவினை ரத்து செய்யப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற பிரித் பாராயண நிகழ்வு ஒன்றில் நள்ளிரவில் தாம் பங்கேற்றிருந்த போது அங்கு பிரசன்னமாகியிருந்த மாவட்டச் செயலாளர் டை கோர்டுடன் இருந்தார் என  தெரிவித்துள்ள ஜனாதிபதி ஏதேனும தேவைகளின் போது தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் இவ்வாறு மேற்கத்தைய ஆடைகளை அணிய வேண்டியதில்லை தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.