இலங்கை பிரதான செய்திகள்

கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிசென்று உள்ளனர்.

கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு நபர்கள் இளைஞரை வழி மறுத்து தாக்கியுள்ளனர்.

தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர் விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி மூர்க்கத்தனமாக வாளினால் வெட்டியுள்ளனர்.  வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.