ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்போடு இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் இன்றையதினம் மதுரையில் கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேற்றையதினம்; ஜல்லிக்கட்டு தொடர்பான கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
இந்நிலையில், இன்று மதுரையில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு ஆதரவாக பெரிய அளவிலான பேரணியை நடத்தியுள்ளனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து சுப்பிரமணியபுரம் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியுள்ளார்கள். கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டதில் இருந்து 2 ஆண்டுகளாக ஜல்லிக் கட்டு நடத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment