ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே இன்று தலிபான்கள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதனையடுத்து சிறிது நேரத்தில் மற்றொரு தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் செய்ததாகவும் இந்த இரண்டு தாக்குதல்களிலும் பாராளுமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்;, 45 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comment