Home உலகம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஐந்து பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஐந்து பேர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அரபு இராச்சியத்தினைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதில் தமது நாட்டின் ஐந்து அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கந்தஹார் ஆளுனரின் இல்லத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆளுனர், ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More