இலங்கை பிரதான செய்திகள்

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 23 பேர் சாட்சியம்

வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென வடக்கு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

குறிப்பாக வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக பல ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த  நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக வடக்கு முதல்வரால் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் இருவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவானது கடந்த இரு தினங்களாக மேற்கொண்ட விசாரணையில், நேற்று 9 பேரும் நேற்று முன்தினம் 14 பேரும் சாட்சியமளித்துள்ளனர்.

நான்கு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியமளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுள் ஒரு அமைச்சருக்கு எதிராகவே அதிக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாட்சியமளித்த அனைவரிடமும் நீதிமன்றம் போன்று சத்தியம் பெறப்பட்ட பின்னரே சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டதாக சட்சிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  அத்தோடு, விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply