பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.
என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார்.
அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
விஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.
Spread the love
Add Comment