குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய விமான தளம் மீது இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளது. டமாஸிற்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான படை முகாம் மீது இவ்வாறு ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக அந்தப் பகுதி முழுவதிலும் புகை மூட்டம் நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு இஸ்ரேல் பகுதியிலிருந்து சில ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிரிய அரச தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதம் இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.
Add Comment