இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரக்கட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளது.  எதிர்வரும் தேர்தல் தொடர்பிலேயே   இ;வ்வாறு முக்கியமான ஓர் அறிவிப்பினை வெளியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து விரைவில் அறிவிப்பார் எனவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பிலும் அறிவிக்கப்பட உள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை எதிர்கால அரசியல்வாதியாக சுதந்திரக் கட்சி நோக்குகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் எந்த கட்சியை கோதபாய தெரிவு செய்வார் என்பது தெரியாது என்ற போதிலும், கோதபாய மீது மக்கள் ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு அரசியலை முன்னெடுக்க கோதபாயவிற்கு சந்தர்ப்பம் உண்டு என குறிப்பிட்டுள்ள ஜோன் செனவிரட்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இணைந்து செயற்படுவார் என பலர் நம்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.