அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 12 மணிநேரமாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள போதும் அவர்கள் இந்த உத்தரவை ஏற்க மறுப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 மணிநேரத்திற்கும் மேலாக வாடிவாசல் அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் உணவு, குடிநீர் இன்றி தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களை வெளியேற போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியும் கூட இளைஞர்கள் கலைந்து செல்லவில்லை.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தும் இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment