இலங்கை பிரதான செய்திகள்

சில்லாலையில் துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சில்லாலையில் துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலத்திற்கான அடிக்கலினை யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நாட்டிவைத்தார் .

துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலம் அமைப்பது தொடர்பில் யாழ் மறைமாவட்டம் குழு அமைத்து ஆலோசனை மேற்கொண்டதற்கு அமைவாக துய யோசவ்வாஸ் யாத்திரைத்தலம் சில்லாலையில் அமைப்பது என்ற தீர்மானத்தை எடுத்தது இதற்கமைவாக சில்லாலை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி எமில் போல் அடிகளாரிடம் இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அருட்பணி எமில் போல் அடிகளார் சில்லாலை பங்குமக்களுடன் கலந்துரையாடி அதற்கான பணியில் முழுமுச்சுடன் ஈடுபட்டார் .

இதனைத் தொடர்ந்து புதிய பங்குத்தந்தையாக பொறுப்பேடுத்த அருட்பணி அகஸ்ரின் அடிகளார் யாத்திரைத்தலத்திற்கான பணியினை வேகப்படுத்தியதன் காரணமாக நேற்று திங்கட்கிழமை 16.01.2017 மாலை யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை யாத்திரைத்தலத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார் இதற்கு முன்னதாக 15.01.2017 யாத்திரைத்தலத்திற்கான துய யோசவ்வாஸ் திருச்சொருபத்தை துய கதிரை அன்னை ஆலயத்தில் இருந்து ஆலய பங்குத்தந்தை அருட்பணி அகஸ்ரின்அடிகளார் தலைமையில் பவனியாக புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளாரால் நற்கருணை வழிபாட்டும் திருப்பலியும் ஓப்புக்கொடுக்கப்பட்டு திருச்சொருபம் ஸ்தாபிக்கப்பட்டது.

துய யோசவ்வாஸ் சில்லாலையில் 06.06.1687 முதல்25.12.1689 வரை இருந்து தன்னலமற்ர சேவைசெய்துள்ளார் இதற்கு அமைவாகவே இங்கு யாத்திரைத்தலம் அமைவதுபொருத்தம் என்பதால் ஆலயம் அமைக்கப்படவுள்ளது. 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் துய யோசவ்வாஸ் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு 2015ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்

சில்லாலை துய கதிரை அன்னை ஆலயத்தில் துய யோசவ் வாஸ் அடிகளார்காலத்தில் இருந்து பணிபுரிந்த இடத்தில் துய யோசவ் வாஸ் சிற்ராலயம் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி நேசன் அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜனவரி13ஆம் திகதி முன்னாள் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது

இதேவேளை துய யோசவ்வாசின் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகம் துய கதிரை ஆலயத்தில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி யேசுரட்ணம் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் துய யோசவ்வாசின் வாழ்கை வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் சில்லாலையிலேதான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.