இலங்கை பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது – வடமாகாண ஆளுநர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே  தெரிவித்தார்

17-01-2017 செவ்வாய்க்கிழமை     சிவில்பாதுகாப்பு  திணைக்களத்தின்  முல்லைத்தீவு  மற்றும்  கிளிநொச்சிக்கான  இணைந்த  கட்டளைத்  தலைமையகத்தின்  ஏற்பாட்டில் வட்டக்கச்சியில்  நடைபெற்ற பொங்கல் விழாவில்  பிரதம  விருந்தினராகக்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு  தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்  அரசியல்வாதிகளுக்குள் இருக்கும்  பிரச்சனைகளால்  வட  மாகாணத்திற்கு  வரும்  பணம்  செலவழிக்கப்படாமல்     திரும்பிச்செல்கின்றது  குறிப்பாக  இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி தண்ணீர்  கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய  தொகைப்பணம் வந்தது,   ஒண்டும் செய்யவில்லை.  மாங்குளம்  பகுதியில்  பொருளாதார  மத்திய நிலையம்  ஒன்றை நிறுவுவதற்கும் பணம் வந்தது   அதுவும் ஒன்றும் செய்யாமல்  திரும்பிப் போனது   எனவும் அவர் தெரிவித்தார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்  வாக்குவாதங்கள்  இல்லாது அனைவரும் சேர்ந்து  மக்களுக்கு வேலைசெய்ய வேண்டும்  நான்  இனவாத  அரசியல்  செய்யவில்லை  நாம் இன மத   கட்சி வேறுபாடின்றி    இணைந்தால் இந்த நாட்டை  அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லமுடியும்.

நமது கடவுள் எல்லாம்  தமிழ் சிங்கள  வேறுபாடின்றி  ஒன்றாக  ஒற்றுமையாக  இருக்கின்றனர்.   அரசியல் பிரமுகர்களும்   தமிழ் சிங்கள  வேறுபாடின்றி  திருமணம்  செய்து ஒன்றாக இருக்கின்றனர்    நாம் சண்டைபிடிக்க   ஒரு காரணம் கூட  இல்லை நாம்  அனைவரும்  ஒற்றுமையாக   செயற்பட வேண்டும்

இராணுவத்தினர் கூட  புனரமைப்புப் பணிகளில்  ஈடுபட்டுக்   கொண்டுள்ளார்கள்  இப்பொழுது  உள்ள இராணுவம்  யுத்ததுக்கானது  அல்ல.  பொலிசாரும்    அவ்வாறே   அனைவரும் மக்களுக்கானவர்கள் அதேபோல்  அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்  அதுவே நல்லிணக்கம்  என  தெரிவித்தார்

அத்துடன்  சிவில்ப்பாதுகாப்பு திணைகளத்தில் வேலைசெய்யும்  தாய்மார்களது     குழந்தைகளை பராமரிப்பதற்கான  பராமரிப்பகத்தை   அமைக்க  தனது    சொந்தப்பணத்தில் இருந்து  இரண்டு இலட்சம்   தருவதாகவும்  உறுதியளித்தார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.