ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மரீனா கடற்கரையில் போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் கலந்து கொண்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் நேரில் வர வேண்டும் அல்லது உரிய பதில் அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், மரீனாவில்; போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சார்பாக 10 பேர் கொண்ட போராட்டக் குழு உருவாக்கப்பட்டு அவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஜனநாயக ரீதியான இந்த போராட்டத்தை தமிழக அரசு மதிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Add Comment