இலங்கை பிரதான செய்திகள்

நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்து இனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்து இனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போது சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் தலைவர்கள் போராடியது போன்று அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்தே தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் மீளவும் யுத்தம் ஏற்படுவதனைத் தவிர்த்து அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழக்கூடிய பின்னணியை அரசாங்கம் உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாதிகளின் இனவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்காது அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.