உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு02 – இத்தாலி பனிச்சரிவில் புதைந்த ஹோட்டலில் இருந்து 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி பனிச்சரிவில் புதைந்த ஹோட்டலில் இருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மத்திய இத்தாலி பகுதியில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் கிரான் சாஸோ மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு பரின்டோலா  (Farindola )நகரில்  செயல்பட்ட  Rigopiano    என்ற   மூன்று மாடி ஹோட்டல் புதைந்தது.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்த  பலா்  உயிரிழந்திருக்கலாம்  என தகவல்கள் வெளியாகிய நிலையில் இத்தாலி ராணுவ வீரர்கள், மோப்ப நாய் மற்றும் நவீன இயந்திரங்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு  9 பேரை உயிருடன் மீட்டதுடன்  5 போின் உடல்களையும் மீட்டுள்ளனா்.

இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து  ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Jan 19, 2017 @ 13:16

நேற்று புதன்கிழமை ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 3 தடவைகள்  பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்  இத்தாலியில்  பனிச்சரிவு    ஒரு ஹோட்டலை  தாக்கியுள்ளதாகவும் இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

நேற்று மாலை கடும் பனிப்பொழிவு  நிலவிய நிலையில்  மத்திய அப்ரசோவைப் பகுதியில் உள்ள கிரான் மலையில்  பரின்டோலா  (Farindola )நகரில்  உள்ள  Rigopiano    என்ற   மூன்று மாடி ஹோட்டலே  இவ்வாறு பனிச்சரிவால் தாக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில்  நடந்த  மீட்புக்களை மேற்கொண்ட போது  பலரது உடல்கள், கண்டெடுக்கப்பட்டதாகவும்  அங்கு மேலும் இறந்த பல உடல்கள் உள்ளன எனவும் இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.