உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – ஈரானில் தீப்பிடித்த 17 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து -30போ் பலி – 38 போ் காயம்

  ஈரானில் தீப்பிடித்த 17 மாடி கட்டிடம இடிந்து விபத்துக்குள்ளானதில்  30   தீயணைப்பு படையினர்  உயிரிழந்துள்ளதாகவும் –  38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈரானில் தீப்பிடித்த 17 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து -10க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்

Jan 19, 2017 @ 16:18

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பழமை வாய்ந்த இந்த  17 அடுக்குமாடி கட்டிடம் தீ பிடித்ததனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு  படையினர் பல மணிநேரமாக அங்கு மீட்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் கட்டிடம் திடீரென சரிந்து விழுந்துள்ளது.

தீயினால் 38 தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டிடம் சரிந்து விழுந்தமையினால்  கட்டிட இடிபாட்டிற்குள் 10க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த 17 அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு கடைகள் காணப்பட்டுள்ள நிலையில் தீப்பிடித்தவுடன் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply