குளோபல் தமிழ்ச் செய்திகள்
திட்டமிட்டமாறு நுகோகொடையில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்பட உள்ள போராட்டம் வெற்றியளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை வெலிக்கடை சிறைச்சாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பலவீனமடையும் போதும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதுபோகும் போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள மகிந்த அரசாங்கத்தினை கவிழ்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment