இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொழும்பு கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான  பேரூந்து  ஒன்றும், நிட்டம்புவ பிரதேசத்தைச் நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமமைடந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வத்துபிட்டிவல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.