இலங்கை பிரதான செய்திகள்

அமைச்சர் பௌசிக்கு எதிரான வழக்கு ஏப்ரல் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக அமைச்சருக்கு எதிராக ஊழல் மோசடி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதென கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார அறிவித்துள்ளார்.

அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமையினால் 1.07 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அமைச்சர் பௌசீ நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.