குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது எனவும் அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அதிகளவான இலங்கையர்கள் தொடர்ந்தும் புகலிடம் கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் எரித்திரியர்கள் அதிகளவில் புகலிடம் கோரி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் புகலிடம் கோரி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இலங்கையர்களே அதிகளவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.
Add Comment