கோவாவில் கோவா துறைமுகம் அருகேயுள்ள சடா பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நேற்றிரவு கடுமையான கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலவரம் காரணமாக கொலை வழக்கு சந்தேக நபரான வினாயக் கோர்பட்கார் என்பவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலை தலைமை அதிகாரி உள்பட இரு காவலர்கள் மற்றும் 9 கைதிகள் காயமடைந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கலவரத்தை பயன்படுத்தி அங்கிருந்த கைதிகள் சிறை அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து, உடைத்தனர் எனவும் அவர்களில் சிலர் தப்பிச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment