குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேற்கு கரையோரப் பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்ளும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் எதேச்சாதிகாரமான போக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கம் 25000 வீடுகளை அமைக்க உள்ளதாகவும் இந்த குடியேற்றத் திட்டத்தில் யூதர்கள் குடியேற்றப்பட உள்ளதாக வும்அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சமாதான முயற்சிகளை உதாசீனம் செய்து வருவதாக பலஸ்தீனம் குற்றம் சுமத்தியுள்ளது.
Spread the love
Add Comment