பிரதான செய்திகள் விளையாட்டு

ரபால் நடால் அரையிறுதிக்குத் தகுதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ரபால் நடால் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். 2014ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நடால் கிரான்ட் ஸ்லாம் அரையிறுதிப் போட்டியொன்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார்.

6-4 7-6 என்ற செற் கணக்கில் காலிறுதிச் சுற்றில் நடால், கனடாவின் மிலோஸ் ரோனிக்கை( Milos Raonic ) வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார். நடால் 14 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிச் சுற்றில் நடால், கிரிகர் டிமோரோவ்வை (Grigor Dimitrov   ) எதிர்த்தாட உள்ளார். மற்றுமொரு அரையிறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் அதே நாட்டைச் சேர்ந்த ஸ்டெய்ன்ஸலஸ் வார்வின்காவை எதிர்த்தாட உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.