இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்

குளோபல் தமிழ் செய்தியாளர்


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களின் கேள்விக்கு நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வெளிவகார அமைச்சின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

சில மாதங்களுக்கு முன்பு வவுனியா சென்ற போது அந்த அணியை சேர்ந்த பல தாய்மார்கள் , மனைவிமார்கள்  என்னை சந்தித்தார்கள் அதனை தொடர்ந்து அந்த விடயத்தை பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையாக நாங்கள் கிளப்பி ஒரு விவாதம் நடத்தினோம்.

அதற்கு பிறகு தான் ஒரு சில மாதங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறப்பது என முடிவெடுத்து அது சட்டமாக பலவிதமான குழப்பங்களின் மத்தியில்  பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டம் இன்னும் அமுல் படுத்தப்படவில்லை இந்த பெற்றோர்கள் , மனைவிமார்கள் , பிள்ளைகள் என்ன கேட்கின்றார்கள்,  தங்கள் சொந்தங்களுக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகின்றார்கள் இராணுவத்தால் காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள் கணவன்மாருக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகின்றார்கள் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது பற்றி தெளிவான பதில் இருக்க வேண்டும் என்று கோருகின்றார்கள்

அவர்களது நியாயமான கோரிக்கை இந்த நிலைமை தொடர கூடாது உண்மையை அறிந்து மக்களது மனதில் சமாதானம் ஏற்பட கூடிய வகையில் அதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும் அந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு ஒரு அமைதி கொடுக்கப்பட வேண்டும். அவர்களது மனதில் சாந்தி ஏற்பட கூடிய வகையில் ஒரு முடிவுக்கு வந்து அது ஒரு உத்தியோக பூர்வமான முடிவாக வெளிவர வேண்டும். இந்த மக்களின் உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply