இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இணைப்பு 2- நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளருக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளருக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென உத்தரவு சுவிட்சர்லாந்து 30 ஆயிரம் யூரோ நட்டஈடு வழங்க வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர் சித்திரவதைக்கு உட்படும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் 2009ம் ஆண்டு இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தாக்கல் செய்த புகலிடக் கோரிக்கை விண்ணப்பத்தை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் உரிய முறையில் பரிசீலனை செய்யத் தவறியுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட குறித்த நபரும் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் 2013ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குறித்த புகலிடக் கோரிக்கையாளர் நாடு திரும்பிய உடனேயே 13 மணித்தியால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீளவும்  அவர் சுவிட்சர்லாந்து திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு

Jan 27, 2017 @ 07:52

சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மதிக்காது சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர் சித்திரவதைக்கு உட்படும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் 2009ம் ஆண்டு இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தாக்கல் செய்த புகலிடக் கோரிக்கை விண்ணப்பத்தை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் உரிய முறையில் பரிசீலனை செய்யத் தவறியுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட குறித்த நபரும் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் 2013ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குறித்த புகலிடக் கோரிக்கையாளர் நாடு திரும்பிய உடனேயே 13 மணித்தியால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீளவும்  அவர் சுவிட்சர்லாந்து திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை பிரகடனத்தன் 3ம் சரத்தை மீறும் வகையில் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் செயற்பட்டுள்ளதனால், குறித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு 30ஆயிரம் யூரோக்கள் செலுத்த வேண்டுமென ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றின் இந்த தீர்ப்பிற்கு சுவிட்சர்லாந்தின் Society for Endangered Peoples என்ற அமைப்பு வரவேற்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.