குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி வரையில் ஜாலியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டே நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் 3,32,000 ரூபா அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்றைய தினம் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment