இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ என்னும் வானொலி நிகழ்ச்சியை இன்று ஒலிபரப்ப இந்திய தலைமைத் தேர்தல் ஆணையகம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வரும் பெப்ரவரி 4ம்திகதி முதல் மார்ச் 8ம்திகதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இதனால் பிரதமர் மோடி மாதம்தோறும் மக்கிளிடையே உரையாற்றும் குறித்த நிகழ்வு இடம்பெறுமாக என சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பில் தேர்தல் ஆணையகத்திடம் மத்திய அரசு அனுமதி கோரிய நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையகம் நிகழ்ச்சியை இன்று ஒலிபரப்ப அனுமதி வழங்கியுள்ளது.
Spread the love
Add Comment