இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்த ஆட்சியின்போது விடுவிக்கப்பட்ட 12 600 பேர் மீள ஒருங்கிணைய ஆரம்பித்துள்ளனர் என்கிறார் சம்பிக்க!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்வதற்கு நோர்வேயிலிருந்து செயற்படும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் திட்டம் தீட்டியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரவித்துள்ளார். இதனை அறிந்துகொண்ட புலனாய்வுப் பிரிவினர் உரிய தரப்பிற்கு அறிவித்ததோடு, அதன் பின்னரே வடக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நால்வர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியின்போது எவ்வித விசாரணைகளும் கண்காணிப்பும் இன்றி விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 பேர் இவ்வாறு உள்ளனர் எனத் தெரிவித்துள்ள சம்பிக்க, இவர்கள் மீள ஒருங்கிணைய ஆரம்பித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply