குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக The Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மறைவுடன் இயக்கத்தின் செயற்பாடுகள் முற்றுப் பெற்ற போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் தமிழகத்தைப் மையப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சிற்கு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அண்மையில் நெடியவன் தரப்பைச் சேர்ந்த சிலர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாகவும் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் இலங்கையை களமாகப் பயன்படுத்தி ஆட் சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளை மீள ஒருங்கிணைக்க முயற்சிக்கும் தரப்பினர் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு செயற்பட முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக, கேரள, கர்நாடக எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment