இலங்கை பிரதான செய்திகள்

பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்ச மேல் நீதிமன்றில் மனு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பிணை வழங்குமாறு கோரி ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணை வழங்குமாறு கோரி கோட்டே நீதிமன்றில் விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ம் திகதி இந்த மனு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது விமல் வீரவன்ச சுமார் 40 அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.