குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெரும்பான்மையான மக்களின் ஆதரவு கூட்டு எதிர்க்கட்சிக்கே உண்டு என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியல் சாசனத்திற்கு முரணாகவும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தேர்தலை நடத்தாமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளினால் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாவும் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment