குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு இலங்கை அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளராக ரெக்ஸ் ரில்லர்சன் (Rex Tillerson) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய ராஜாங்கச் செயலாளருடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும், இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு இந்த வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் ரெக்ஸ் ரில்லர்சனை ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவு செய்துள்ளார்.
Spread the love
Add Comment