குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊக்க மருந்து பயன்படுத்தியமை நிரூபணமான சக வீரர் மீது கோபம் கிடையாது என நட்சத்திர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். சக வீரரின் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு காரணமாக போல்ட் ஒர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழக்க நேரி;ட்டுள்ளது.
அஞ்சல்ப் போட்டியில் ஜமெய்க்காவின் சார்பில் பங்கேற்ற வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளதனால் இவ்வாறு பதக்கம் ஒன்றை இழக்க நேரிட்டமை வருத்தமளிக்கின்றது என்ற போதிலும் சக வீரர் மீது குரோத உணர்வு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஹூசெய்ன் போல்ட்இதில் ஒரு பதக்கத்தை தற்பொழுது இழந்துள்ளார். 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது நெஸ்டா காட்டர் என்ற சக வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தார் என்பது அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டான பரிசோதனைகளின் மூலம் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment