Home உலகம் சிரியாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் – லெபனான்

சிரியாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் – லெபனான்

by admin

குளோபல் தமிழ் செய்தியாளர்

சிரியாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என லெபனான் ஜனாதிபதி மிச்சேல் ஓன் ( Michel Aoun ) கோரிக்கை விடுத்துள்ளார். சிரிய அரசாங்கம் அகதிகளுக்கு பாதுகாப்பான வலயங்களை அறிவிக்க  வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் இவ்வாறான பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அகதிகளை பாதுகாக்க உலக நாடுகள், சிரியாவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென கோரியுள்ளார்.

மேலும் சிரிய யுத்தம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரையில் ஒரு மில்லியன் சிரிய மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More