பிரதான செய்திகள் விளையாட்டு

அலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்

அலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து  விலகியுள்ளார். 32 வயதான அலிஸ்டெர் குக் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தியாவில் 4-0 என்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியபோது, தனது  அணித்தலைவர் பதவி தொடர்பாக கேள்விகள் எழுந்திருப்பதாக குக்  தெரிவித்துள்ளார்.

2012 ஆண்டு முதல் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற அலிஸ்டெர் குக் தற்போது அதில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை உறுதியுடனும், நம்பிக்கையுடனும், மாபெரும் பெருமையுடனும் குக் வழிநடத்தியதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆன்ட்ரூ ஸ்ட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap