இலங்கை பிரதான செய்திகள்

மங்கள சமரவீர சவூதிக்கு பயணம் செய்ய உள்ளார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வெளிவிவகார அமைசம்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை ள் அஷ்மி தாஸிம் (Azmi Thassim) இதனைத் தெரிவித்துள்ளார். 69ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் முதலீடு  போன்றன தொடர்பில் சவூதி அரேபியாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 38000 சவூதி பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers