குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசன சூழ்ச்சியின் மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக பிளவடையும் நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை அரசியல் சாசன சூழ்ச்சி மூலம் பிளவடையச் செய்ய முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மீகொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் மற்றும் முதலீடு பெற்றுக் கொள்ளும் போர்வையில் நாட்டை வெளிநாட்டவருக்கு தாரை வார்த்து விடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment